#BigBreaking :: நெமிலி, அரக்கோணம் தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் இன்று திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் காஞ்சிபுரம் தாலுகாவிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாவிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Holidays for schools and colleges in Nemili Arakkonam taluk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->