வீடு புகுந்து கொள்ளை..முக்கிய குற்றவாளி 3 பேர் கைது! - Seithipunal
Seithipunal


புதுவையில்  வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கடந்த 02.01.2025 அன்று தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வீடு புகுந்து கொள்ளை அடித்த வழக்கின் குற்றவாளிகளை கண்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று  இரவு சுமார் D' நகர் வட்ட ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி நகர் காவல் நிலைய SI திரு.S. ரமேஷ், SI திரு. V. கோவிந்தன் மற்றும் SGSI ராஜி, காவலர்கள் கோவிந்தன், ஹரிகரன், இசைவேந்தன், ஜெயக்குமார், மோகன், ராஜசேகர், சதீஷ், டேவிட், சுந்தர் ஆகியோர்களின் உதவியுடன் வழக்கு விசாரணையில் இருந்தனர்.

அப்போது  கோரிமேடு Truck Terminal பகுதியில் சந்தேகப்படும்படி நின்று இருந்த SUZUKI BRIZZA PY-05-VE-2347 என்ற பதிவு எண் கொண்ட கிரே காரை சோதனை செய்தபோது 1.ஸ்ரீராம் (எ) ஸ்ரீராமசந்திரன் (39) த/பெ பங்கஜாக்ஷன், தற்போதைய முகவரி: எண்: 10-வது குறுக்கு தெரு, டீச்சர் காலணி, பிச்சைவீரான்பேட், மூலகுளம், புதுச்சேரி, நிரந்தர முகவரி: எண்: 29, நேரு வீதி, இஞ்சினியரிங் கார்டண், வாணரபேட், முதலியார்பேட், புதுச்சேரி, 2. நிவாஸ் (26) த/பெ யுவராஜ். எண்: 10, பரதிதாசன் வீதி, லக்ஷ்மி நகர், லாஸ்பேட், புதுச்சேரி மற்றும் 3. சூரி (எ) சதீஷ் (29) த/பெ செல்வம், எண்: 166, அனிச்சகுப்பம், நம்பிகிய நல்லூர், புதுத்துபட்டு (PO), விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு ஆகியோர் சந்தேக்கிடமாக, முன்னுக்குபின் முரனாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை பின்பு முறையாக விசாரணை செய்ததில் மேற்படி கொள்ளை வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். உடன் அவர்களை இவ் வழக்கில் கைது செய்த அவர் சம்பவத்திற்கு பயன்படுத்திய மேற்படி கார் செல்போன் பணம் ரூபாய் ஒரு லட்சத்து எழுவது ஆயிரம் (Rs. 1,70,000/-) ஆகியவற்றை பரிமுதல் செய்து மீண்டும் விசாரித்து அவர்களிடமிருந்து 15 சவரன் தங்க நகைகள், I-phone, வீச்சு அருவாள் ஆகியவற்றை பரிமுதல் செய்யப்பட்டது. இவ் வழக்கில் மேலும் இரண்டு குற்றவாளிகள் சம்மந்தபட்டு இருப்பதது தெரியவந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு எண்கள்: 173/2024, 176/2024 மற்றும் 197/2024 மற்றும் ரெட்டியார்பாளையம் காவல் நிலை வழக்கு மொத்தம் 4 வழிப்பறி வழக்கு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் ஈட்டுபட்டு சில மாதங்களாக தலைமறைவாக இருந்த பல்வேறு மாநிலங்களின் 34 வழக்கில் சம்மந்தபட்ட முக்கிய குற்றவாளி ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சையதுபாஷா வயது 33 என்பவரை கோவாவில் தனிப்படை சேர்ந்த STF ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், SI சந்தோஷ், போலீஸார்கள் ஆனந்து, சினோஜ், ராஜா, பிரபாகரன், கோவிந்து, கிருஷ்ணமூர்த்தி, சுரேந்தர், முருகன், பிரேம், செல்வம், சரவணன் மற்றும் விசு ஆகியோர் பிடித்து புதுச்சேரி அழைத்து வந்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்ததில் அவர் மேற்படி வழக்குகளில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டதின்பேரில் அவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார்.

மேற்படி வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, துரித விசாரணை செய்து குறுகிய காலத்தில் எதிரிகளை அடையாளம் கண்டு, கைது செய்து கொள்ளைபோன நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்திய கார் மற்றும் வீச்சு அருவாள் ஆகியவற்றை பரிமுதல் பறிமுதல் செய்த சிறப்பு விசாரணை குழுவிற்கு காவல்துறை துணை தலைவர் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) புதுச்சேரி, அவர்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Home burglary Three main accused arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->