வடலூரில் ரூபாய் ஒரு கோடியில் தோட்டக்கலை பூங்கா -தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தோட்டக்கலை துறையின் கீழ் 24 பூங்காக்கள் தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சியில் தொடங்கப்படும் பூங்காவிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வடலூர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3.20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், புதர்ச் செடிகள் அகற்றுதல், நிலம் சமன்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடம், சிறுவர் பூங்கா, மூலிகைச் செடிகள் நடுதல், நடை பாதைகள் அமைத்தல் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் மேற்கண்ட பணிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதி செலவிடப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அந்த இடத்தை தோட்டக்கலைத் துறை திறந்தவெளியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுமதி வழங்கிய இடத்தில் மூன்று மாதங்களுக்குள் பணி தொடங்கப்பட வில்லை எனில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horticulture park in Vadalur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->