சிறுவன் மீது இரும்பு கதவு விழுந்து உயிரிழந்த சம்பவம் - விடுதி உரிமையாளர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அயனாவரத்தில் வசித்து வருபவர் ரமேஷ். ஆட்டோ ஓட்டுனரான இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கடந்த  சனிக்கிழமை மாலை பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுதுவதற்காக சென்றனர். அங்கு அவர்கள் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினர். 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தி விட்டு, அறைக்கு சென்றனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த ரமேஷின் மகன் நித்திஷ் மீது இரும்பு கேட் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதில், படுகாயமடைந்த சிறுவன் நித்திஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தானர். 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து, நேற்று சிறுவனின் குடும்பத்தினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், போலீசார் தனியார் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் பெரியப்பாளையம், அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அதன் பின்னர் அவரை, ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hostel owner arrested for fell steel door on boy died case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->