தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இயல்பைவிட 2 - 4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்; அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வான்நிலையே நிலவக்கூடும்.

மேலும், இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமான வெப்பநிலை ஒரு சில பகுதிகளில் அதிகரிக்கப்படும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலே நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் தமிழகத்தில் எந்த பகுதியில் மழை பதிவாகவில்லை.

அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hot weather summer sunny days tn weather update 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->