மயிலாப்பூர் : பிரபல ஹோட்டலில் லிப்டில் சிக்கி ஊழியர் பலி.! - Seithipunal
Seithipunal


மயிலாப்பூர் : பிரபல ஹோட்டலில் லிப்டில் சிக்கி ஊழியர் பலி.!

சென்னை மயிலாப்பூரில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் லிப்டில் சிக்கி தூய்மை பணியாளர் இருவர் உயிரிழந்தார். இதைப்பார்த்த ஹோட்டல் நிர்வாகம் உடனடோலியாக லிப்டை ஆப் செய்துவிட்டு சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை வீரர்களுடன் சென்றனர். அங்கு அவர்கள் லிப்டுக்கும் கதவுக்கு இடையே சிக்கி உடல் துண்டான நிலையில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

பின்னர் போலீசார் இளைஞரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சமபவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், லிப்டில் சிக்கி உயிரிழந்த இளைஞர், பெரம்பூரை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்தது. 

மேலும், ஊழியர் ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் லிப்டில் செல்லும்போது, கதவு மூடாமல் லிப்ட் கீழே இறங்கியுள்ளது. இதனால், ஹோட்டல் ஊழியர் அபிஷேக் உடல் இரண்டாக துண்டானது என்றும் விசாரணையில் தெரியவந்தது. பிரபல ஹோட்டலில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hotel employee died in channai mayilapoor hotel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->