பணத்தை தவறவிட்ட முதியவர்; நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே உள்ள எரியூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் என்ற முதியவர்,மதுரையில் இருக்கும் தன்னுடைய சொந்தக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, அவரும் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூருக்கு வந்துள்ளனர்.

அந்த பேருந்து நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும், இருசக்கர வாகனங்களை விட்டுவைக்கும், இடத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தன் மனைவியுடன் பேருந்து நிலையத்திற்குள் வந்து மதுரை வரை செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, தனது பனியனுக்குள் வைத்திருந்த ரூ 20 ஆயிரம் பணத்தை பார்த்தபோது பணம் காணாமல் போனதை தெரிந்து உடனே பணத்தை அங்கும் இங்கும் தேடி அலைந்திருக்கிறார் முதியவர் தினகரன்.

உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது, குறிஞ்சி நகர் என்ற ஊரைச் சேர்ந்த, விவசாயி முருகேசன் என்ற 65 வயது முதியவர் தனது கையில் வைத்திருந்த பணத்தை கொடுத்து இதை யாரோ தவற விட்டதாக ஆய்வாளர் கலைவாணி மற்றும் சார்பு ஆய்வாளர் செல்வ பிரபு ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

அந்த சமயம் காவல் நிலையத்திற்கு வந்த தினகரன் மற்றும் அவரது மனைவியிடம், எஸ்.ஐ கலைவாணி அங்கு வந்திருந்த விவசாயி முருகேசன் கையாலேயே பணத்தை கொடுத்து அவர்களிடம் வழங்க செய்தார். பின்னர் அந்த முதியவர் தந்த பணத்தை கொடுத்து, சரியாக உள்ளதா என எண்ணிப்பார்க்க சொன்னார்கள். உடனே இருவரும் கண்ணீர் மல்க அந்த கூலி தொழிலாளிக்கு நன்றி கூறினர்.

தினமும் ஏதோ ஒரு கூலி வேலைக்கு சென்று பிழைப்பவர் முதியவர் முருகேசன். ரோட்டோரம் கிடந்த 20 ஆயிரம் ரூபாயை, காவல் நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்த அவரது நேர்மையை குறித்து காவல் ஆய்வாளர் கலைவாணி அவருக்கு பொன்னாடை, தந்து பாராட்டு தெரிவித்தார். சார்பு ஆய்வாளர் செல்வபிரபு மற்றும் நிலைய காவலர்களும் முதியவரின் செயலை கண்டு மிகவும் பாராட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband And Wife Missed Their 20 Thousand Rupees Near By Thiruppathur Bus Stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->