பரபரப்பு! கணவன்-மனைவி இடையே தகராறு! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறுவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை பகுதியில் உள்ள பெலவர்த்தியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். திருமணம் ஆகி தனி தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

ராமமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் கணவன் மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் மனைவியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமியை அருகில் உள்ளவர்கள் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மகாராஜா கடை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடித்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் குடும்பத்த தகராறு பிரச்சனையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் ராமமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for stabbing wife to death in family dispute


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->