நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு..! கணவரின் வெறிச்செயல்..! போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் இளம் பெண்ணை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவரது மனைவி ஏஞ்சலின் டயா (34). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவும் இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவியின் கை, தலை, கருத்து, உட்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து ஏஞ்சலின் டையாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மனைவியை வெட்டிய செல்வராஜ் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband cuts young woman with sickle in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->