நெல்லை.! மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓட்டம்.!
Husband escapes after killing wife
நெல்லையில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓடியுள்ளார்.
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைகுளம் நடுதெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 8 வயதுடைய மகளும் உள்ளனர்.
கல்யாணசுந்தரம் திருப்பூரில் கார் மெக்கானிக் வேலையைப்பார்த்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் திருப்பூரிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான மானுருக்கு வந்துள்ளார்.
இங்கு வந்த பிறகும் மீண்டும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டதால், ஆத்திரத்தில் கல்யாணசுந்தரம் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி ராஜலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான கல்யாணசுந்தரத்தை தேடி வருகின்றனர்.
English Summary
Husband escapes after killing wife