வரதட்சணை வழக்கில் கணவர் குடும்பத்தினர் பெயரை சேர்க்கக்கூடாது.! தமிழக அரசு வழக்கறிஞர் கடிதம்.!! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமை தொடர்பான புகாரில் காரணம் இன்றி கணவரின் குடும்பத்தினர் பெயரை சேர்க்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யும்போது முதல் தகவல் அறிக்கையில் கணவர் குடும்பத்தினரின் பெயரை சேர்ப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

வரதட்சணை கொடுமை வழக்குகளில் தேவையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அதனை நீதிபதிகள் அங்கீகரிக்க கூடாது எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கடந்த ஜூன் மாதம் தேவையில்லாமல் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பதிய கூடாது என தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband family names should not be included in dowry case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->