டிக்கெட் எடுத்தேன்..ஆதாரம் உள்ளது..சர்ச்சைகுள்ளான காவலர் ஆறுமுகபாண்டி!!
I took the ticket I have the proof police
அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து தான் பயணம் மேற்கொண்டதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், சர்ச்சைக்குள்ளான காவலர் ஆறுமுக பாண்டி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நான்கு நரி என்ற இடத்தில் பேருந்தில் ஏறிய ஆறுமுகம் பாண்டி என்ற காவலரிடம் பயணத்துக்கு எடுக்கும்படி நடத்துனர் கேட்டபோது பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார். காவலர் பணியில் இருப்பவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து கழகம் காவலர்கள் கண்டிப்பாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்தது. சர்ச்சைக்கு உள்ளான காவலர் ஆறுமுக பாண்டியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஆறுமுக பாண்டி எதிர்பாராதவிதமாக மயங்கி வீழ்ந்தார்.
விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் ஆறுமுக பாண்டி சிகிச்சை பெற்று டஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த ஆறுமுக பாண்டி காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தவறாக வீடியோ வெளியிட்டதாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமில்லாமல் பயணிச்சிட்டு எடுத்துக்கொண்டு தான் பயணம் மேற்கொண்டதாகவும் அதற்கு தகுந்த ஆதாரம் இருப்பதாகவும் காவலர் ஆறுமுக பாண்டி தெரிவித்தார்.
English Summary
I took the ticket I have the proof police