"திமுக ஆட்சியில் தவறு நடந்தால் பரிகாரம் செய்யப்படும்" .. அமைச்சர் சேகர்பாபு பேட்டி..!!
If wrong in the DMK regime it will rectified sekarbabu
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று தூத்துக்குடி வந்திருந்தார். அப்பொழுது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சமயபுரம் கோவிலில்மொட்டை அடிப்பவர்களில் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர் "திமுக ஆட்சியில் தவறுகள், முறைகேடுகள் யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த ஆட்சியில் தவறு நடந்தால் அதற்குரிய பரிகாரத்தை நிச்சயமாக செய்து தான் ஆக வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். பொறுமையாப்ரல் 30ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 1ம் தேதி திக்விஜயம், மே 2ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 3ல் தேரோட்டம், மே 4ல் கள்ளழகர் எதிர் சேவை, மே ஐந்தாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிலையை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
English Summary
If wrong in the DMK regime it will rectified sekarbabu