#BREAKING:: ஈபிஎஸ் வழங்கும் இஃப்தார் விருந்து.. அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பின் பொழுது இஃப்தார் விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அதிமுக சார்பில் இஃப்தார் விழுந்து வழங்கப்பட உள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் இவ்வாண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக பொதுச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வருகின்ற 16.04.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி அளவில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என அதிமுக தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iftar party behalf of ADMK Edappadi Palanisamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->