போக்ஸோ வழக்கில் கட்டப்பஞ்சாயத்து., அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சிக்கப்போகும் புள்ளிகள்.! - Seithipunal
Seithipunal


போக்சோ வழக்குகளில் கைதான குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட நபர்களை சமாதானம் செய்வதற்காக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் தெரிவித்ததாவது, "திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போக்ஸோ வழக்குகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் 52 வழக்குகளிலும், 2020 ஆம் ஆண்டு 53 வழக்குகளிலும், 2020 ஆம் ஆண்டு 8 வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சமாதானமாக சென்று விடுவதாக தெரிவித்து, கட்டப்பஞ்சாயத்து மூலம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

ஒரு சில பகுதிகளில் இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து அரங்கேறி, குற்றவாளிகள் தப்பித்து விடுதலையாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததன் மூலம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது மீண்டும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களும், பாதுகாவலர்களும் இந்த கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மண்டலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையான வழக்குகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்று மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IG Balakirushnan Say About POCSO Act Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->