குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை ஐஜிகளுக்கு வழங்க முடியாது - உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்!
IGs cannot be empowered to enact gundas laws Tamil Nadu Govt in Madurai Branch
குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை காவல்துறை தலைவர்களுக்கு வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தக்கல் செய்துள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தை பிறபிப்பது தான் சரியாக இருக்கும், அப்போது தான் காவல்துறை தவறாக குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்அழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், குண்டர் தடுப்பு சட்டம் உத்தரவில் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக மண்டல காவல்துறை அதிகாரி குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை பிறபிக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டுவருவதற்கான சாத்திய கூறுகளை ஆராயுமாறு உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் நிலைபாட்டை தெளிவு படுத்தினார். தற்போது இருக்கும் நிலையை தொடர்வது சரியாக மையும் என்றும், மாவட்டஆட்சி தலைவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தை பிறபிப்பதே சரியாக இருக்க முடியும் என்றும் காவல்துறை ஐஜி களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கப்பட கூடாது என்றும் கூறினார்.
English Summary
IGs cannot be empowered to enact gundas laws Tamil Nadu Govt in Madurai Branch