கள்ளகாதலை கண்டித்ததால் கள்ளகாதல் ஜோடி தற்கொலை.. திருப்பூர் அருகே பரபரப்பு..!
illegal couple committed suicide
கள்ளகாதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவருக்கும் நடராஜ் என்பவரின் மனைவி மாரியம்மாள் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறவே இருவரும் பழகி வந்துள்ளனர்.
இது இரு வீட்டாருக்கும் தெரியவரவே இருவரையும் பழக கூடாது என எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து, இருவரும் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களின் மீட்ட போது சடலமாக கிடந்தது மாயமான மணிகண்டன் மற்றும் மாரியம்மாள் என்பது தெரியவந்தது. அவர்களின் உடலின் அருகே மதுப்பாட்டில் சாணிபவுடர் ஆகியவை கிடந்தது. அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் மேற்கொண்டதில் கள்ளக்காதலை உறவினர்கள் கண்டித்ததன் காரணமாக 2பேரும் மதுவில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
illegal couple committed suicide