தமிழ்நாட்டை வெளுக்க போகும் மிக கனமழை.!! வானிலை மையம் அலர்ட்.!! - Seithipunal
Seithipunal


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதேபோன்று நாளை (16-05-2024) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும் வரும் மே 17ஆம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதனைத் தொடர்ந்து வரும் மே 18ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் ராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை மதுரை தேனி திண்டுக்கல் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி கரூர் திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலியிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அந்த வகையில் வரும் மே 19ஆம் தேதி நீலகிரி கோயம்புத்தூர் தேனி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் ஈரோடு திருப்பூர் நாமக்கல் கரூர் திருச்சி தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்கோட்டை திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உளளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD issued very heavy rainfall waring in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->