வலுவிழக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
IMD Report Weather Report
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக வலுவிழக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, அது தற்போது ஒரு சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
வானிலை ஆய்வாளர்களின் தகவலின்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மண்டலம் அடுத்த 12 மணி நேரம் குறைந்த வேகத்தில் நகர்ந்து, பின்னர் வலுவிழக்க ஆரம்பிக்கும்.
English Summary
IMD Report Weather Report