புயல் பாதிப்பு எதிரொலி.. புதுச்சேரியில் சாலைகள் ,வாய்க்கால்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்!
Impact of the storm Renovation of roads, canals in full swing in Puducherry
புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் ,வாய்க்கால்கள் கடுமையான சேதமடைந்தன,இதனால் சேதமடைந்த சாலைகள் மற்றும் வாய்க்கால்களை புதுப்பிக்கப் பணி தற்போது மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குளத்துமேடு வார்டு நீடராஜப்பயர் வீதி - செயின்ட்தெரேசா வீதி.சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி மற்றும் பாரதி வீதி இணைப்பு பகுதியில் உடைந்த சேதம் அடைந்த பழைய வாய்க்கால் கல்வெட்டுகளை மாற்றி புதிய இரும்பு கிரில் காங்கிரட் கல்வெட்டுகளாக புதுப்பிக்கப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை இன்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்து அப்பகுதி மக்களுக்கு உதவிடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் இளநிலை பொறியாளர்
குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் கைலாஷ், சாமிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
English Summary
Impact of the storm Renovation of roads, canals in full swing in Puducherry