சிபிஎஸ்இ தேர்வில் ஆள்மாறாட்டம் - கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்.!!
impersonation in cbse exam delhi
கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் காலியாகவுள்ள 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற ஒருவர் மீது அந்த பள்ளியின் ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதேபோல், பயோ மெட்ரிக் பதிவிலும் அந்த நபரின் பதிவுகள் பொருந்தவில்லை. இது குறித்து அந்த ஆசிரியர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர் அதிகாரிகள், தேர்வு எழுத வந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் சச்சின் என்பதும் நிதின் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது. இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் இரண்டு பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஆள் மாறாட்டம் தொடர்பாக கைமாறிய தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆள் மாறாட்ட மோசடியில் மேலும் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
impersonation in cbse exam delhi