பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் - மஹாராஷ்டிராவில் சோகம்.!
women sicode after kill girl baby in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள கன்சோலி பகுதியில் வசித்து வந்தவர் பிரியங்கா காம்ப்ளே. இவரது மகள் வைஷ்ணவி. இதற்கிடையே, பிரியங்காவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனால், அவர் மிகுந்த மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பிரியங்கா தனது கணவர் வெளியில் சென்றிருந்தபோது, தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வெளியில் சென்றிருந்த பிரியங்காவின் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்து தனது மனைவி, மகள் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
women sicode after kill girl baby in maharastra