கால் பண்ணனும்.. ரகசிய வார்த்தை.. வீடுதேடி வரும் கஞ்சா..! சென்னையில் கைதான கும்பல் பகீர்.!!
in Chennai kanja gang arrested by police investigation going on
சென்னையில் உள்ள காவல்துறையினருக்கு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதென்பது பெரும் சவாலான மற்றும் சிக்கலான விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் காவல் துறையினருக்கு சந்தேகம் வராத வகையும்., அவர்களின் கண்ணில் மண்ணை தூவும் வகையிலும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.. நீ படித்த பள்ளியில் நான் தலைமையாசிரியர் என்பதை போல காவல் துறையினரும் தங்களின் கெத்தை காண்பித்து தான் வருகிறார்கள்.
சென்னையை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பெரும்பாலானோரிடம் கஞ்சா போதை பழக்கமானது இருந்து வருகிறது. ஒரு காலத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபரை கண்டாலே எளிதில் அடையாளம்கொண்டு வரும் வகையில் இருந்த நிலையெல்லாம் மலையேறி., தற்போது படித்த இளைஞர்கள் மற்றும் டிப் டாப்பான நபர்களை போல வேடமணிந்து சுற்றித்திரிந்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்கள் அதிகளவில் இருக்கும் தரமணி., துரைப்பாக்கம்., வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை டிப் டாப் உடையில் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலானது எப்படியோ காவல்துறையினருக்கு தெரியவரவே., இரகசிய வழியில் காவல் துறையினரும் தங்களின் பணியை அதிரடியாக துவக்கினர்.
இவர்களின் திட்டப்படி கஞ்சா கும்பலுடைய அலைபேசி எண்ணை அறிந்து., வாடிக்கையாளர் போலவே தன்னை பாவனைப்படுத்தி அலைபேசியில் தொடர்பு கொள்கையில்., எதிர்முனையில் இருந்த நபர் எவ்விதமான பேச்சும் இன்றி அலைபேசியை துண்டித்தார். இதற்கு பின்னரே கஞ்சா தேவைக்கு "ரகசிய வார்த்தை" உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கஞ்சா வாடிக்கையாளரை கசக்கியத்தில் ரகசிய வார்த்தையை வெளிவந்ததை அடுத்து., ரகசிய வார்த்தையை கூறியவுடன் எவ்வுளவு தேவை என்று குரல் கேட்டுள்ளது. சற்றும் யோசிக்காத காவல் துறையினர் 100 பொட்டலம் என்று வாடிக்கையாளராக மாறி பேசவே., ரூ.30 ஆயிரம் என்று வாயார கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து கஞ்சா பார்ட்டியின் ஆலோசனைப்படி முதலில் கோட்டூர்புரம் - மத்திய கைலாஷ் என்று சோழிங்கநல்லுரில் கஞ்சாவை பெற்றுக்கொள்ள கூறியுள்ளது.
தனிப்படை காவல் அதிகாரி வாடிக்கையாளராக மாறி செல்லவே., கஞ்சா சப்லையரை பின் தொடர்ந்து செல்ல இறுதியாக தரமணியில் உள்ள பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் உள்ள இல்லத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரியை ரகசிய முறையில் பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியாக கஞ்சா பார்சல் போடும் பணி நடைபெற்று வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அதிரடியாக உள்ளே நுழைந்த பிற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஐ.டி ஊழியர் கமலக்கண்ணன் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்த லிண்டன் டோனி ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் லிண்டன் டோனி டெலிவெரி பாயாக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Chennai kanja gang arrested by police investigation going on