தண்ணீர் பஞ்சம் எதிரொலி.! பள்ளிகளுக்கு விடுமுறை.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கமானது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடுமையான அவதியடைந்து வரும் நிலையில்., புயலால் மழை பெய்யும்., எதோ ஒரு சூழ்நிலையில் மழை பெய்யாதா? வெப்பம் சிறிதளவு தனியாதா? என்ற ஏக்கத்துடன் மக்கள் தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில்., சென்னையில் உள்ள சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் அடுத்தடுத்து வறட்சியை சந்திக்கவே., தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று மக்கள் கடும் அச்சத்தில்., வரும் நாட்களை எதிர்கொள்வதற்கு செய்வதறியாது திகைத்து வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில்., தண்ணீர் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட துவங்கியது. 

தண்ணீர் இல்லாமல் மக்கள்., தொழிற்சாலைகள்., வணிக வளாகங்கள்., உணவு விடுதிகள் என்று அனைவரும் தவித்து வந்த நிலையில்., சென்னையில் உள்ள பெரும்பாலான உணவு கூடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மதிய சாப்பாடு உற்பத்தி நிறுத்தப்பட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும்., சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில்., இதற்கு அடுத்தபடியாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் நாளை விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை தாமஸ் மவுண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுமுறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அறிவித்துள்ள நிலையில்., வேளச்சேரி பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிவறைகள் அனைத்தும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai private school leave for no water problem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->