சரவணா கோல்ட் பேலஸ் நிறுவனம் அரசு வங்கியை ஏமாற்றிய வழக்கில், ரூ.235 கோடி சொத்துக்கள் மீட்பு..! - Seithipunal
Seithipunal


சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் (கோல்டு பேலஸ்) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், இந்தியன் வங்கி தி.நகர் கிளையில் கடன் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.  இந்நிலையில், பண மோசடி வழக்கில் தொடர்புடைய 235 கோடி ரூபாய் சொத்துக்களை, இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நிறுவனம் வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன், தவறான புள்ளி விவரங்களுடன் கூடிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடன் வழங்கியபிறகே, நிறுவனத்தின் நிதி நிலை, வருவாய் ஆகியவை தொடர்பாக, அவர்கள் கொடுத்த ஆவணங்கள் பொய்யானவை என்று தெரிய வந்தது.

இதையடுத்து வங்கி அளித்த புகாரை தொடர்ந்து, சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. பண மோசடி சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து நிறுவனத்துக்கு சொந்தமான 234.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை, மோசடியால் பாதிக்கப்பட்ட இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In the case of Saravana Gold Palace defrauding the government bank Rs 235 crore assets recovered


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->