கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.! வாக்குமூலத்தில் சோகம்., நீதிபதி அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் ஏகத்தம்மன் கோவில் தெருவை சார்ந்தவன் ராஜ். இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கெளரி. இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய ஆகாஷ் என்ற மகன் உள்ள நிலையில்., ராஜுவுக்கு மது அருந்தும் பழக்கமானது இருந்து வந்துள்ளது. 

இதனால் தினமும் பணிக்கு சென்று விட்டு மது அருந்திவிட்டு வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த தருணத்தில்., திடீரென பணிகளுக்கு செல்லாமல் இருந்து விட்டு., மது அருந்தி வீட்டில் இருக்கும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதுமட்டுமல்லாது கெளரியின் நடத்தையில் சந்தேகமுற்ற ராஜு., தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளான். 

இதுமட்டுமல்லாது இவர்களின் ஒன்றரை வயதுடைய குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும்., குழந்தையை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளான். எந்த சமயத்திலும் மது போதையில் தகராறு செய்வதையும்., மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளான். 

மது உடல் நலத்திற்கு தீங்கானது, drinking is injurious to health,

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி செய்வதறியாது திகைத்து வந்த நிலையில்., கடந்த 2016 ஆம் வருடத்தில் வீட்டில் மது போதையில் உறங்கிக்கொண்டு இருந்த ராஜின் தலையில் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை செய்தார். இதனால் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கணவன்., சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கணவர் உயிரிழந்ததை அடுத்து வீட்டின் கதவை தாளிட்டு கெளரி தலைமறைவான நிலையில்., சுமார் இரண்டு நாட்கள் கழித்த பின்னர்., இவரின் இல்லத்தில் இருந்து துர்நாற்றமானது வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

vellore girl killed husband.

இதுமட்டுமல்லாது இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., தலைமறைவாக இருந்த கெளரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., கணவனின் சந்தேக குணம் மற்றும் கொடுமையால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து., இவரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் சமர்ப்பித்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி., கெளரிக்கு ஆயுள் தண்டனை விதித்தும்., ரூ.5 ஆயிரம் அபராத தொகை செலுத்த கூறியும் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து கெளரி தற்போது சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore girl killed her husband due to husband torture court announce jail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->