வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கிய வருவாய்த்துறையினர் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து, அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 14,000 அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவை தேர்தல் பணிகளை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய வருவாய்த் துறையினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். வருவாய்த்துறையினரின் போராட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

income tax department employees protest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->