#BREAKING:: ஜி ஸ்கொயர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் ஜி ஸ்கொயர் நிறுவனங்களுக்கு சொந்தமான 50க்கும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக குடும்ப உறுப்பினர்கள் பங்குதாரர்களாக இருக்கும் ஜீ ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 6:00 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை 6:00 மணி முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் நிலங்களை விற்பனை செய்துள்ளனர். அதேபோன்று பெங்களூரு ஹைதராபாத் மைசூர் ஆகிய இடங்களிலும்  நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக கருதப்படும் லோட்டஸ் பாலா என்பவரிடம் வருமான வரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனையானது மெகா சோதனையாகவும் மாறலாம் என வருமானத்தில் வரி துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனையானது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax raids premises owned by G Square companies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->