கனமழையின் காரணமாக புழல் ஏரிக்கான நீர்வரத்து இரண்டு மடங்கு அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. சென்னையை பொருத்தவரை சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை நேற்று முன்தினம் முதல் பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் மாநகராட்சி ஊழியர்கள் சில பகுதிகளில் சாலைகளை தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புழல் ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்குன்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழையால் நேற்று 13 செ.மீ மழை பதிவானது. புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று வரை புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 967 கனஅடியில் இருந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் 1,997 கன அடியாக அதிகரித்து உள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் கன மழை தொடருமே ஆனால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில நாட்களிலேயே புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புழல் ஏரி முழு கொள்ளளவு எட்டிய பிறகு உபரி நீரை திறப்பதற்கு பதிலாக தற்பொழுது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக நீர்த்திறப்பு செய்யலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increase in water flow to Puzhal Lake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->