அதிகரிக்கும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவன்மார்களின் அட்டகாசம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில், பெண் உதவி பொறியாளரை, இரும்பு சேரால் தாக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவரின் செயலை கண்டித்து, ஊழியர்கள் போராட்டத்தில் எடுபடாது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை யூனியன் அலுவலகத்தில், உதவி பொறியாளராக கிருஷ்ணகுமாரி பணியாற்றிவருகிறார். அப்போது, அங்கு வந்த கோவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் முருகன் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம்  சாலை போட்டதற்கான பில்லை கொடுத்துள்ளார்.

அதை சரிபார்த்த பின், கிருஷ்ணகுமாரி, அதுதொடர்பாக ஊராட்சிமன்ற தலைவியின் கணவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, டெண்டர் விடாத சாலைக்கு எப்படி நீங்கள்  சாலை அமைத்தீர்கள் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் பொறியாளர் இடையே  வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வலுக்கவே, தன்னிலை மறந்து,  இரும்புச் சேரை தூக்கி, கிருஷ்ணகுமாரியை தாக்க முயன்றுள்ளார் முருகன். அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அவரது இந்த செயலை கண்டித்து, அரசு ஊழியர்கள், யூனியன் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலங்களாக அரசு அலுவலகத்தில் புகுந்து அரசியல் கட்சியினர் அடாவடி செய்வது அதிகரித்துள்ளதாகவும், உள்ளாட்சி பதவிகளில் பொறுப்பு வகிக்கும் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவர்கள் பணியில் ஈடுபடுவதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவே வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Increasing panchayat council chairperson's husbands


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->