#Breaking | கடைசி நேரத்தில் திருப்பம் - முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து! - Seithipunal
Seithipunal


ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இண்டி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி செல்ல இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. வரும் 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

இந்நிலையில், வரும் 1-ந்தேதி இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர். காங்கிரஸ், தி.மு.க., சமாஜ் வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா, ராஷ்டீரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி டெல்லிக்கு செல்ல இருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இண்டி கூட்டணி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்பி டிஆர் பாலு பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indi Alliance PM Candidate MKStalin Delhi plan cancel


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->