இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.! நாகையில் பரபரப்பு.!
Indian Navy guard commits suicide by shooting himself in nakapattinam
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்திய கடற்படையில் காவலராக பணிபுரிந்து வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இன்று அதிகாலை திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உயிரிழந்த ராஜேஷின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் ராஜேஷ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் நாகை இந்திய கடற்படை அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indian Navy guard commits suicide by shooting himself in nakapattinam