தகுதிநீக்கம் அடிப்படையில் 300 பேரை வேலைநீக்கம் செய்துள்ள இன்போசிஸ் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


இன்போசிஸ் நிறுவனத்தை சேர்ந்த  300 ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்திற்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த இவர்கள் தகுதி காண் தேர்வில் வெற்றி பெறாத நிலையில், வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனதாக கூறப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம், பணிக்கு தேர்வு செய்த ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இப்படி மைசூரு வளாகத்தில் அளிக்கப்பட்ட அடிப்படை திறன் பயிற்சி முடிவில், ஊழியர்கள், உரிய திறன்களை பெற்று விட்டார்களா என்று கண்டறியவு தேர்வு நடத்துகிறது.

இந்த பயிற்சியில், மூன்று முறை வாய்ப்பு அளித்தும் வெற்றி பெறாத ஊழியர்களே இவாறு பணியில் இருந்து விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவரும் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் சங்கம் (என்.ஐ.டி.இ.எஸ்.,) கூறுகையில், 'வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இது பற்றி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Infosys has dismissed 300 people on the basis of disqualification


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->