சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் 1,433 பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி!!
Initial training for 1433 staff working at counting centers in Chennai
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் 1433 மேற்பார்வையாளர்கள் முன் பார்வையாளர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை மொத்தம் 265 மேஜைகள் மூலம் 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது .சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தற்போது துவக்கி வைத்தார்.
பின்னர் மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் நான்காம் தேதி துவங்க உள்ள நிலையில் வாக்கு என்னும் மையங்களில் பணிபுரிய உள்ள நுண்பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் உதவியாளர்கள் உதவி அலுவலர்கள் ஆகியோர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்ப்பட்ட மூன்று மக்களவை தொகுதிகளையும் சேர்த்து 357 நுன் பார்வையாளர்கள், 374 மேற்பார்வையாளர்கள், 322 அலுவல உதவியாளர்கள், 380 உதவியாளர்கள் என மொத்தமாக 1433 பேர் பணிகள் ஈடுபட உள்ளனர். மேலும் 47 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். சென்னையில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தமாக 922 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
வடசென்னையில் சட்டமன்ற தொகுதிவாரியாக 14 மேஜகள், மத்திய சென்னையில் 14 மேஜைகள், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 265 மேஜைகள் மூலம் மூன்று நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. 321 சுற்றுகளாக எண்ணப்படுகிறது
வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்படும். சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படும்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்.ஆனால் தபால் வாக்குகளின் முடிவுகள் இறுதியில் தான் வெளியிடப்படும் என வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.
English Summary
Initial training for 1433 staff working at counting centers in Chennai