கள்ளச்சாராய மரணங்கள்.. ஏ.டி.எஸ்.பி அந்தஸ்தில் விசாரணை அதிகாரிகள் நியமனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 15.05.2023 அன்று விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார்.

முதல்வரின் ஆணைக்கிணங்க 16.05.2023 இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கள்ளச்சாராய வழக்குகளை விசாரணை செய்ய ஏடிஎஸ்பி அந்தஸ்து கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பேரம்பாக்கம் போலி மதுபான வழக்கை சிபிசிஜடி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் தலைமையில் கள்ளச்சாராயம் வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளன.

இன்று சிபிசிஐடி தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறையினிடமிருந்து இன்று பெற்று ஆராய உள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை முதல் களத்திற்கு நேரடியாக செல்லும் விசாரணை அதிகாரிகள் தங்களின் விசாரணை தொடங்க உள்ளனர் என சிபிசிஐடி தரப்பு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

investigating officers appointed in Counterfeit liquor cases


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->