தலைமை தகவல் ஆணையர் ஆகிறார் இறையன்பு ஐஏஎஸ் – முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்து தேடுதல் குழுவின் தலைவர் நீதிபதி அக்பர் அலி கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி குழுவின் அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

தேர்வுக்குழு அளித்த தகுதியானவர்கள் பட்டியலைக் கொண்டு தகவல் ஆணையர்களை முதல்வர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக் குழு கூடி தேர்வு செய்யும். இந்நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களின் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட பெயர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்படும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை தகவல் ஆணையராக இறையன்பு தேர்வு செய்யப்பட்டால், அவர் தனது பதவி காலத்திற்கு முன்பாகவே ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iraianbu ias as Chief Information Commissioner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->