தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்ஃபான் வருத்தம்! - Seithipunal
Seithipunal


குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்ஃபான் தரப்பில் ஒரு விளக்கக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை. மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தான் வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை தெரிவித்து கொள்வதாகவும் யூடியூபர் இர்ஃபான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை ஒரு வழக்கு கூட பதியவில்லை. யூடியூபர் இர்ஃபான் செய்த இந்த தவறை சாமானிய மக்கள் செய்ய முடியுமா? செய்தால் சும்மா விடுமா அரசு? ஆளுங்கட்சியை சேர்ந்த உதயநிதி, கனிமொழி, ஆளுநர் உள்ளிட்டவர்கள் துணை இருப்பததால் தான் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, எடுக்க போவதும் இல்லை என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Irfans youtuber


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->