வயநாடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்ற செல்வப்பெருந்தகை அழைப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நமது இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திருமதி. பிரியங்கா காந்தி அவர்கள் 23.10.2024 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மீது பற்றும், பாசமும் கொண்டு முழு நம்பிக்கையோடு கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை வயநாடு வாக்காளப் பெருமக்கள் பெற்றுத் தந்தனர். அதேபோல், இந்த இடைத் தேர்தலிலும் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடைய தலையாய கடமையாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களின் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம். வருகிற நவம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நவம்பர் 11 ஆம் தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள். எனது தேர்தல் பரப்புரை நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் துவங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெறவுள்ள வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பமுள்ள தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wayanad by elections selvaperundhai invited to work with the election committee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->