மீண்டும் வெடிக்கப்போகும் அதிர்ச்சி!....ஈரான் இலக்குகள் மீது....மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாவது, ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  ஈரான் ராணுவ உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி, போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அந்நாட்டு ராணுவத்திற்கு அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக  மேற்கு ஆசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The shock that will explode again on Iran targets war tension in west asian countries


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->