தெற்கு ரயில்வே அறிவிப்பு உண்மையா?...ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்!...கூடுதல் ரயில்கள் இயக்கம்!...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் 'ஏர் ஷோ 2024' என்ற பெயரில்  முதல்முறையாக விமான சாகச நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 வரை சிறப்பாக நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினம் வரும் 8-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில்,  கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விமான சாகசத்தில், முதலாவதாக, ஆகாஷ் கங்கா குழுவினர், 2000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

சேத்தக் ஹெலிகாப்டர்கள் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட்டப்படி வானை அதிர வைத்த நிலையில், தஞ்சையில் இருந்து புறப்பட்ட ரபேல் விமானங்கள் சென்னை மெரினா கடற்கரையை வலம் வந்தது. அதுமட்டுமல்லாமல் இடிமுழுக்கத்துடன் ரபேல் விமானங்கள் பறக்க பறக்க கடற்கரையில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியை காண வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. வேளச்சேரி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் இளைஞர்கள் படியில் தொங்கியவாறே பயணித்ததால் பதற்றம் நிலவியது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.இதனால் தெற்கு ரயில்வே முறையான சிறப்பு ரயில்களை இயக்கவில்லை என பொதுமக்கள் மற்றும் விமான சாகசத்தை காண  வந்தோர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தினமும் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை சுமார் 55 ஆயிரம் பேர் ரயிலில் பயணம் மேற்கொள்வார்கள் என்றும், நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே பணிகள் நடைபெற்று வருவதால், சிறப்பு ரெயில் இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ள தெற்கு ரயில்வே,  பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க  கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is southern railway announcement true 3 lakh people traveling in trains additional trains running what happened


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->