முதல்வர் பதவி அவ்வளவு ஈஸியா சார்? சட்டென ரஜினி கூறிய பதில்.... - Seithipunal
Seithipunal


ரஜினி அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள லால் சலாம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 170 - வது படமாகும். இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது. 

படத்தின் படப்பிடிப்பு 8௦ சதவீதம் முடிவிடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

வேட்டையன்  படத்திற்கு பிறகு  171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களிடையே ஜெயிலர் வரவேற்பை பெற்றதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. ஜெயிலர் 2  முடிந்தவுடன் 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. 

இந்த நிலையில்  இன்று வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையில்  இருந்து ஹைதரபாத் சென்றார் ரஜினி. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, லால் சலாம் பட வரவேற்பு குறித்த கேள்விக்கு, “லால் சலாம் படம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு என கேள்விப்பட்டேன். மிகப்பெரிய வெற்றியடைஞ்சிருக்கு. அதனால் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர்கள் அரசியலுக்கு  வருவது குறித்தும், முதல்வர் பதவி அவ்வளவு எளிதானதாக தெரிகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” என கூறி தவிர்த்துவிட்டார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is the post of chief minister so easy sir? Rajini's reply suddenly...


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->