பயணம் செல்ல வேண்டாம்! தமிழக அரசு தரப்பில் அவசர அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal



ஜெருசலம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று, தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இஸ்ரேல் மீது காசமுனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுத குழுக்கள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் எல்லையோர நகரங்களை ஹமாஸ் பயங்கரவாத குழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால், அந்த பகுதியை மீட்பதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் தொடங்கியுள்ளனர். 

இஸ்ரேல் போர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் தொடர் வான்வெளி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலின் காரணமாக இரு தரப்பிலும் சுமார் 530 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்ரேல் மீது இரண்டாவது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் போர் தீவிரம் அடைந்துள்ளதால், ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Gaza War


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->