தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்திருப்பது உறுதி!...ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை  சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், கடந்த 2018-ம் ஆண்டு தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலந்து நதி மாசுபடுவதாகவும், அதனை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான இந்த வழக்கிணை விசாரித்த நீதிமன்றம், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இருந்த போதிலும்  இந்த உத்தரவினை பின்பற்றவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்தார்.

இந்த நிலையில், ஆற்று மண்ணை சோதித்ததில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்திருந்தது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is confirmed that there is sewage mixed in the thamirabarani river


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->