செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் "போலீஸ் பாதுகாப்புடன்" ஐ.டி ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக அதிக தொகைக்கு பத்திரப்பதிவு நடைபெற்றதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடைபெற்ற அனைத்து பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதனால் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Raid at Senkunram Registrar Office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->