சென்னையில் 10 இடங்களில் IT ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியார் கட்டுமான நிறுவனமான ஜீ ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.

சென்னையில் நீலாங்கரை, அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், நந்தனம், அடையாறு ஆகிய பகுதிகளில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை ஆனது நடைபெற்று வருகிறது. 

ஜி ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் பாலா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா மற்றும் அவரது ஊழியர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 கடந்த நான்கு ஆண்டுகளில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் மூன்றாவது சோதனையாகும். ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜனவரி 2019 மற்றும் ஏப்ரல் 2023ல சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த  2023ம் ஆண்டன நடைபெற்ற சோதனை குறித்தான மதிப்பீடு இன்னும் முடிவடையாத நிலையில், இன்று மீண்டும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது‌ என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid in gsquare related places in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->