ஐடி ரெய்டு | 2017-2018 கோப்புகள் தான் கேட்டாங்க.. பதிவுத்துறை பரபரப்பு விளக்கம்!
IT Raid Sub Register office issue
அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றும் பதிவுத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாகவும், அந்த கோப்புகள் வழங்கப்பட்டதாகவும் பதிவுத்துறை விளக்கமளித்துள்ளது.
பதிவுத்துறையின் விளக்கத்தில், "ஆவணம் பதிவுக்கு முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதார்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது.
ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
English Summary
IT Raid Sub Register office issue