போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல!...கவரப்பேட்டை ரயில் விபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


நடப்பு மாதம் 11-ம் தேதி பாக்மதி விரைவு ரெயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.  

இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.  இந்த விபத்தில்  19 பேர் படுகாயம் அடைந்தனர். முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக  சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அதில், தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, பாக்மதி விரைவு ரெயிலுக்கு முன்னால், 3 நிமிடத்திற்கு முன்பு சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் சென்றதும், 3 நிமிட இடைவெளிக்குக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை கழற்ற முடியுமா என சோதனை நடத்தப்பட்ட போது, சிறுசிறு பகுதியாக போல்ட் நட்டுகளை கழற்றி இருக்கலாம் என்று விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல், ஒரு பகுதி போல்ட் நட்டுகளை கழற்றும்போது சிக்னல் மாறும் வகையிலான தொழில்நுட்பம் இல்லை என்பதும்,  சூலூர்பேட்டை ரெயில் கடந்ததும் முழுமையாக போல்ட் நட்டை கழற்றும்போது பாக்மதி ரெயில் விபத்தில் சிக்கி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It was not outsiders who removed the bolt nut shocking information released in the kavarapettai train accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->