சாம்சங் தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை!...ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு! - Seithipunal
Seithipunal


சாம்சங்’ தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும்  தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது தொழிலாளர்கள் யாரும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் தொழிலாளர்கள் எலன் மற்றும் சூரிய பிரகாஸ் ஆகிய  இரண்டு பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jail sentence for samsung workers sreeperumbudur court sensational order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->