ஜன.6ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி..!! வெளியான முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம்  வரை பலபேரு மாவட்டங்களில்  போட்டியில் தொன்றுதொட்டு பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம்.ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை துன்புறுத்தப்படுவதாக பீட்டா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக மத்திய ஆண்ட காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்திருந்தது. அதனை காங்கிரஸ் அரசுக்கு பிறகு அமைந்த பாஜக அரசும் கடைபிடித்தது.

இந்த தடைக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடித்தது. இதனை அடுத்து அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசால் சட்டப்பேரவையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள்நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் வரும் 2024ம் ஆண்டு ஜன.6ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jallikattu competition from Jan6 in Pudukottai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->