எனது கணவரின் உடல் கிடையாது... ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை.!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.பி.கே ஜெயக்குமார், தனது உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த ஏப்ரல்  30 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் அன்றைய தினமே ஜெயக்குமார் திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே அவரது உடல் கடந்த 4 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கிடையே ஜெயக்குமாரின் மனைவி, இது தனது கணவரின் உடல் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை உறுதி செய்ய ஜெயக்குமாரின் மகனிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar son DNA test 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->